சிறுமியின் கை அகற்றப்பட்ட விவகாரம்! சட்ட வைத்திய அதிகாரியின் அறிக்கை நீதிமன்றில் சமர்ப்பிப்பு

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிறுமி ஒருவரின் கை மணிக்கட்டுடன் அகற்றப்பட்ட விவகாரம் தொடர்பில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை சட்ட வைத்திய அதிகாரி அறிக்கை யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றுக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது.

குறித்த விடயம் தொடர்பில் தெரிய வருவதாவது,

காய்ச்சல் காரணமாக கடந்த மாத இறுதியில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் 12 இலக்க விடுதியில் அனுமதிக்கப்பட்ட சிறுமியின் இடது கை மணிக்கட்டுடன் அகற்றப்பட்டிருந்தது.

சிறுமியின் பெற்றோர் முறைப்பாடு
இந்த சம்பவம் தொடர்பில் சிறுமியின் பெற்றோர் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.

கடந்த 13 ஆம் திகதி வழக்கு விசாரணைக்கு வந்த போது நீதவான் சிறுமியின் கை அகற்றப்பட்டமை தொடர்பில் அறிக்கை தருமாறு மூவர் அடங்கிய நிபுணர் குழுவை நியமித்துள்ளார்.

இந்த விசாரணை குழுவின் அறிக்கை கிடைப்பதற்கு மேலும் 10 நாட்கள் தாமதமாகலாம் என அறிவிக்கப்பட்ட நிலையில் வழக்கை எதிர்வரும் 27 ஆம் திகதிக்கு நீதவான ஒத்திவைத்துள்ளார்.

இந்நிலையில், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை சட்டவைத்திய அதிகாரி சிறுமியின் கை அகற்றப்பட்டமை தொடர்பில் போதனா வைத்திய சாலை சார்பில் மருத்துவ அறிக்கை ஒன்றை யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றத்திற்கு அனுப்பி வைத்துள்ளார்

மேலும் அறிய  கண் வைத்தியர் தனியார் விடுதியில் சடலமாக மீட்பு!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here