சிறுமியை புதருக்குள் அழைத்துச் சென்று முத்தமிட்ட 43 வயது நபருக்கு நேர்ந்த கதி

மேல் நீதிமன்றம் மூன்று பிள்ளைகளின் தந்தை ஒருவருக்கு 2 வருட கடூழிய சிகொழும்பு றைத்தண்டனை விதித்து அதனை ஐந்தாண்டுகளுக்கு ஒத்திவைத்து உத்தரவிடப்பட்டுள்ளது.

7 வயது சிறுமியை வீட்டுக்கு அருகில் உள்ள புதருக்குள் அழைத்துச் சென்று முத்தமிட்ட குற்றத்தை ஒப்புக்கொண்ட 43 வயதுடைய குறித்த நபருக்கே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி அமல் ரணராஜா இந்த உத்தரவை பிறப்பித்த நிலையில், 25,000 ரூபா அபராதம் விதித்ததோடு, பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 50,000 ரூபா இழப்பீடு வழங்கவும் உத்தரவிட்டார்.

குற்றம் சாட்டப்பட்டவர் தாம் செய்த குற்றத்துக்கு வருத்தம் தெரிவித்த நிலையில், இது தொடர்பில் பரிசீலித்த அரச தரப்பு சட்டத்தரணி சங்க வீரசூரிய, சட்டமா அதிபரின் அங்கீகாரத்துடன் குற்றப் பத்திரிகையில் திருத்தம் செய்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே நீதிவான் இந்த உத்தரவை பிறப்பித்தார்.

மேலும் அறிய  வாகனப் பதிவில் மோசடி.!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here