சிறுமி வன்புணர்வு; சந்தேகநபர் தற்கொலை

12 வயதான சிறுமியை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய சம்பவம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்ட முச்சக்கர வண்டி சாரதி காலி மாவட்டம், உடுகம நீதவான் நீதிமன்றத்தின் கழிவறைக்குள் கழிவறையை துப்பரவு செய்ய பயன்படுத்தும் இரசாயனத்தைக் குடித்து தற்கொலை செய்துக்கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.