சேட்டில் ஒட்டியிருந்த ஸ்டிக்கர் பொட்டினால் யாழில் பிரபல வங்கி ஊழியரிற்கு நேர்ந்த கதி

யாழ்ப்பாணத்தில் உள்ள பிரபல வங்கி ஒன்றில் பணியாற்றும் உத்தியோகத்தர் ஒருவர் கடமைமுடிந்து வீடு வருகையில் அவரது சேட்டில் ஸ்டிக்கர் பொட்டு ஒன்று ஒட்டி இருந்துள்ளது. தவறுதலாக எங்காவது இருந்து ஒட்டி இருக்கும் என எண்ணிய அவரது மனைவி குறித்த விடயத்தை பெரிதாக்கவில்லை.

சிறிது நாட்களின் பின்னர் எதேட்சையாக அவரது போனில் பேஸ்புக்கை திறந்து பார்த்த மனைவி, அங்கு அவருக்கு நண்பியாக உள்ள ஒரு பெண்ணின் அனேக புகைப்படங்களுக்கு அவரினால் ஹார்ட் லைக் அடங்கலால பல லைக்குகள் வழங்கப்பட்டிருந்ததை அவதானித்துள்ளார்.

உடனே அந்த பெண்ணின் profile ஐ கிளரிப் பார்த்தவர் அதிர்ச்சி அடைந்துள்ளார். இவரின் ஆடையில் ஒட்டி இருந்த அதே அச்சு அசலான பொட்டை அப் பெண் அணிந்திருந்தது அவரால் அவதானிக்கப்பட்டது.

அதனை தொடர்ந்து கணவரிடம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளார். சண்டை முத்திப்போக, கீழே கிடந்தா நாய்ச் சங்கிலியை எடுத்து கணவன் மீது தூக்கி அடித்துள்ளார். அந்தத் தாக்குதலில் கணவனின் உதடு பிரிந்துள்ளது.

குறித்த வங்கி ஊழியர் தற்போது மாஸ்க் அணிந்தவாறே வெளியில் சென்றுவருகிறாராம்.

குறித்த சம்பவமானது மனைவியின் நெருங்கிய தோழிமூலம் வெளியில் வந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here