டொக்ரர் கதைத்தால் பிரச்சினையில்லை… தாதியர் கதைத்தால் மட்டும்தான் கண்ணுக்குள் குத்துகிறதா? : யாழ் போதனா ஸ்மார்ட் போன் தடைக்கு தாதியர் சங்கம் எதிர்ப்பு!

டொக்ரர் கதைத்தால் பிரச்சினையில்லை… தாதியர் கதைத்தால் மட்டும்தான் கண்ணுக்குள் குத்துகிறதா? என யாழ்ப்பாணம் போதனா வைத்தியாலையில் தாதிய உத்தியோகத்தர்கள் கடமை நேரத்தில் ஸ்மார்ட் தொலைபேசி பயன்படுத்தக்கூடாது என்று, வைத்தியசாலை பணிப்பாளர் விடுத்துள்ள அறிவிப்புக்கு அரச தாதியர் சங்கம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

வைத்தியசாலை பணிப்பாளரின் அறிவித்தலுடன் உடன்பட முடியாதென்றும், அந்த அறிவிப்பை மீள பெறுமாறும் வலியுறுத்தியுள்ளது.

அரச தாதியர் சங்கத்தின் செயலாளர் அஜித் ரத்நாயக்க கையொப்பமிட்டு இந்த கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

(1) இச்சம்பவம் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின்படி, தாதியர்களின் கையடக்கத் தொலைபேசி பாவனை நேரடியாகப் பாதித்துள்ளதா என்பது தெளிவாகத் தெரியவில்லை.

(2) தற்போது, ​​நோயாளிகளின் பராமரிப்புக்குத் தேவையான அவசர சந்திப்புகள், மற்றும் நோயாளர் பற்றிய நிலைமைகளை மருத்துவர்களை தொலைபேசி வழியாக தொடர்பு கொண்டே தெரிவிக்கின்றனர். இந்த சூழ்நிலையைக் கருத்தில் கொள்ளாமல் தன்னிச்சையான முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

(3) கைத்தொலைபேசிகளின் பயன்பாடு சிகிச்சையின் குறுக்கீட்டிற்கு ஒரு காரணமாக இருந்தால், அது தாதியர்களை போவே மருத்துவர்களுக்கும் பொருந்தும். தாதியரை மட்டும் குறிவைப்பது தெளிவாக நியாயமற்றது.

யாழ்.போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் எடுத்த தீர்மானத்தை இடைநிறுத்துவதற்கு உடனடியாக பணிப்புரை வழங்க வேண்டும் என அன்புடன் வேண்டுகிறேன் என கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அண்மையில் வவுனியா பொது வைத்தியசாலையில் நடந்த குழறுபடி, யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் சிறுமியின் கை அகற்றப்பட்ட விவகாரத்தை தொடர்ந்து, தாதியர்களை குறிவைத்து விதிக்கப்பட்டுள்ள இந்த கட்டுப்பாடு பல தரப்பிலும் விமர்சனத்தை கிளப்பியிருந்தது.

சிறுமியின் கை அகற்றப்பட்ட விவகாரத்தில் தனியார் வைத்தியசாலையின் பங்கு, மருத்துவர்களின் கடமை தவறல் போன்றவற்றை மூடி மறைத்து, தாதியர்களின் தலையில் தவறை சுமத்த முயல்வதாகவும் விமர்சனம் கிளம்பியிருந்தது குறிப்பிடத்தக்கது.

டொக்ரர் கதைத்தால் பிரச்சினையில்லைடொக்ரர் கதைத்தால் பிரச்சினையில்லை... தாதியர் கதைத்தால் மட்டும்தான் கண்ணுக்குள் குத்துகிறதா? : யாழ் போதனா ஸ்மார்ட் போன் தடைக்கு தாதியர் சங்கம் எதிர்ப்பு!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here