தங்காலையில் ஒருவர் வெட்டிப்படுகொலை

தங்காலை குடாவெல்ல பகுதியில் நபர் ஒருவர் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

அதே பகுதியில் வசிக்கும் 50 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

தனிப்பட்ட தகராறு காரணமாக இந்த கொலை நடந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தங்கல்ல பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.