தடைசெய்யப்பட்ட பகுதியில் தொடர்ந்தும் விகாரையின் கட்டுமானங்களுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

திருகோணமலை இலுப்பைக்குளத்தில் தடைசெய்யப்பட்ட பகுதியில் அமைக்கப்பட்டுவரும் கட்டுமானங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை (1) ஞாயிற்றுக்கிழமை எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது.

திருகோணமலை நிலாவெளி பிரதான வீதியின் இலுப்பைக்குளம் பகுதியில் பொரலுகந்த ரஜமகா விகாரையின் கட்டுமானப் பணிகளுக்கு மக்களால் எதிர்ப்பு தெரிவித்துவந்த நிலையில் குறித்த பகுதியில் கட்டுமானப்பணிகளுக்கு கிழக்கு மாகாண ஆளுநரினால் தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.

இருப்பினும் கடந்த திங்கட்கிழமை முதல் குறித்த பகுதியில் கட்டுமானப்பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

தடைசெய்யப்பட்ட பகுதியில் தொடர்ந்தும் விகாரையின் கட்டுமானங்களுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் - Lanka News - Tamilwin News

குறித்த பகுதியில் இடம்பெறும் கட்டுமானங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் அதனை தடைசெய்யக் கோரியும் திருகோணமலை மக்களினால் நாளை (1) ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 மணியளவில் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

இலுப்பைக்குளம் மற்றும் அதனை சூழவுள்ள கிராமங்களில் காலாகாலமாக தமிழ் மக்களே வாழ்ந்து வருகின்றனர். சிங்கள மக்களின் குடியிருப்பு இல்லாத பகுதியில் விகாரை அமைப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள காணியில் இரகசியமாக பௌத்த கட்டுமாணப் பணிகள்

திருகோணமலை – இலுப்பைக்குள பகுதியில் அமைக்கப்படவுள்ள விகாரைக்கு எதிராக போராட்டம்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here