கொழும்பிலிருந்து மட்டக்களப்பு நோக்கி வந்த அதிசொகுசு பேரூந்துடன் முச்சக்கர வண்டி மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
கட்டுநாயக்க பகுதியில் நேற்றிரவு இவ்விபத்துச்சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன், அப்பகுதியில் கூடிய பொதுமக்களினால் பதற்ற நிலைமையிம் ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
மட்டக்களப்பைச்சேர்ந்த தனியார் ஒருவருக்குச் சொந்தமான குறித்த பேரூந்து கொழும்பிலிருந்து மட்டக்களப்பு நோக்கி வந்து கொண்டிருந்த போதே கட்டுநாயக்க பகுதியில் முச்சக்கர வண்டியுடன் மோதுண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது.
இதன் போது முச்சக்கர வண்டியில் பயணம் செய்த இருவர் இஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.