தவறான முறையில் கனுலா மூலம் மருந்து ஏற்றியதால் கை அகற்றப்பட்ட குழந்தைக்கு 4 மில்லியன் நட்டஈடு

தவறான முறையில் ஹனுலா மூலம் மருந்து ஏற்றியதால் கை அகற்றப்பட்ட குழந்தைக்கு 4 மில்லியன் நட்டஈடு

மருத்துவக் கவனயீனம் (medical negligence) என்றால் என்ன? அண்மித்த உயர் நீதிமன்ற தீர்ப்புக்களை முன்னிறுத்திய ஓர் பகிர்வு.

பாணதுறை வைத்தியசாலையில் குழந்தை ஒன்றுக்கு மெனிக்னைஸ் என்ற ஒரு நோயிற்காக ஹனுலா மூலம் அன்ரிபயற்றிக் ஏற்ற முற்பட்டபொழுது அது நாளத்தில் சேர்க்கப்படாமல் நாடியில் சேர்க்கப்பட்டதன் காரணமாக அந்தப் பகுதியில் இரத்தக் கட்டி ஏற்பட்டு அதன் விளைவின் காரணமாக குழந்தையின் மணிக்கட்டுப்பகுதியோடு கை அகற்றப்பட்டது.

இவ்வழக்கில் விசேட நட்டமாக 3.5 மில்லியன் ரூபாவும் மருத்துவப் பதிப்பிற்காக 5 இலட்சமும் என மொத்தமாக 4 மில்லியன் ரூபாவை பாதிக்கப்பட்ட தரப்பிற்கு வழங்கவேண்டும் என மாவட்ட நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பினை உயர்நீதிமன்றம் உறுதிப்படுத்தியிருந்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here