தாதியர் விடுதியிலிருந்து பெண்ணிகளின் உள்ளாடைகளை திருடிவந்த ஆசாமி கைது!

கொழும்பு தேசிய வைத்தியசாலையின் தாதியர் விடுதியிலிருந்து பெண்களின் உள்ளாடைகளை திருடிவந்த ஒருவர் பாதுகாப்பு அதிகாரிகளால் பிடிக்கப்பட்டு மருதானை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

சந்தேகநபரை பிடிக்கும்போது அவரிடம் மூன்று உள்ளாடைகள் இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

சமீப காலமாக, பெண்கள் விடுதியில் பெண்களின் உள்ளாடைகள் திடீர் திடீரென காணாமல்போவது குறித்து தாதியர்கள் பாதுகாப்பு பிரிவினருக்கு முறைறைப்பாடு செய்திருந்தனர்.

நேற்று (19) காலை, வழக்கம் போல் விடுதிக்குள் நுழைந்த சந்தேக நபர், அங்கு காணப்பட்ட உள்ளாடைகளை திருடியபோது பிடிபட்டுள்ளார்.

பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட சந்தேகநபர் களுத்துறையைச் சேர்ந்த 37 வயதுடைய சுகாதார உதவியாளராக பணிபுரிபவராவார்.

சந்தேக நபர் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதுடன், மருதானை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.