திருகோணமலையில் நோயுற்ற பெண்ணை பாலியல் வன்புணர்வு செய்த நபர் கைது

திருகோணமலை – தெவனிபியவர பகுதியில் 47 வயதுடைய நோயுற்ற பெண்ணொருவரை பாலியல் வன்புணர்வு செய்த குற்றச்சாட்டின் பேரில் சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மஹதிவுல்வெவ – தெவனிபியவர பகுதியில் நோயுற்ற நிலையில் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த பெண்ணொருவரை பாலியல் வன்புணர்வு செய்துள்ளதாக பொலிஸ் அவசர இலக்கத்திற்கு அழைப்பு விடுத்து முறைப்பாடு செய்துள்ளனர்.

இதையடுத்து அங்கு விரைந்த பொலிஸார் சந்தேகத்தின் பேரில் இரண்டு பிள்ளைகளின் தந்தையான அதே பகுதியைச் சேர்ந்த 33 வயது இளைஞரொருவரை கைது செய்துள்ளனர்.

சம்பவம் குறித்து தெரிய வருவதாவது,

சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட நபர் உட்பட குறித்த பெண்ணின் கணவர் மற்றும் அயல் வீட்டுக்காரர் கூட்டாக இணைந்து மது அருந்தி விட்டு மஹதிவுல்வெவ பிரதேசத்தில் நடைபெற்ற இசை கச்சேரி நிகழ்ச்சி ஒன்றிற்கு சென்றுள்ளனர்.

இதனையடுத்து கைது செய்யப்பட்ட குறித்த சந்தேக நபர் மது அருந்திய வீட்டுக்கு வந்து நோயுற்ற நிலையில் இருந்த பெண்ணை பாலியல் வன்புணர்வு செய்துள்ளதுடன், விருப்பமில்லாத பட்சத்தில் குறித்த பெண்ணை தாக்கி காயப்படுத்தியுள்ளதாகவும் தெரிய வருகின்றது.

இந்நிலையில் பாதிக்கப்பட்ட குறித்த பெண் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட குறித்த சந்தேக நபரை திருகோணமலை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதுடன் விசாரணைகளை மொரவெவ பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

https://tamiliz.com/samsung-galaxy-f34-5g-price-and-specifications/

மேலும் அறிய  கண் வைத்தியர் தனியார் விடுதியில் சடலமாக மீட்பு!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here