திருமணத்திற்கு முன் விடுதியில் தங்கிய காதலர்கள்!! காதலிக்கு வந்த தொலைபேசி அழைப்பால் பின்னர் நேர்ந்த விபரீதம்

நிட்டம்புவ பகுதியில் விடுதி ஒன்றில் வைத்து காதலியை கொடூரமாக தாக்கிய சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிட்டம்புவ, எல்லக்ல பிரதேசத்தில் அமைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காதலனை பொலிஸார் நேற்று கைது செய்துள்ளதாக தெரிய வந்துள்ளது.

கைது செய்யப்பட்ட 28 வயதுடைய சந்தேக நபரை அத்தனகல்ல நீதவான் நீதிமன்றில் முன்னிலை படுத்தியதாக நிட்டம்புவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதி
காதலனால் படுகாயமடைந்த 29 வயதான காதலி வத்துபிட்டிவல வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

எதிர்வரும் நாட்களில் திருமணத்தை எதிர்பார்த்து காத்திருந்த இருவரும் விடுதி ஒன்றில் தங்கியிருந்த வேளையில் காதலன் என கூறப்படும் இளைஞன் மது அருந்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அப்போது ​​காதலியின் கையடக்கத் தொலைபேசி எண்ணுக்கு முன்னதாக வந்த அழைப்பு ஒன்றின் எண்ணை காதலன் கேட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

இருவருக்குமிடையில் வாக்குவாதம் ஏற்பட்டதையடுத்து காதலன் மனிதாபிமானமற்ற முறையில் தாக்குதல் நடத்தியதாக தெரியவந்துள்ளது.

மேலும் அறிய  கண் வைத்தியர் தனியார் விடுதியில் சடலமாக மீட்பு!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here