திலீபனின் நினைவேந்தல் ஊர்திக்கு எதிராக மன்னாரில் சுவரொட்டிகள்

தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் ஊர்தி வடக்கு கிழக்கில் மக்களின் நினைவேந்தலுக்கு சென்று வரும் நிலையில், குறித்த நினைவேந்தல் பவனிக்கு எதிராக மன்னாரில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.

இன்றைய தினம் (20) அதிகாலை மன்னார் மாவட்டத்தின் பல பாகங்களில் பரவலாக குறித்த சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.

‘தேசப்பற்றுள்ள மக்கள் இயக்கம்’ என்ற பெயரில் குறித்த சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.

குறித்த சுவரொட்டியில்

திலீபனின் நினைவேந்தல் ஊர்திக்கு எதிராக மன்னாரில் சுவரொட்டிகள் - Lanka News - Tamilwin News

“தமிழ் ஈழத்திற்காக உண்ணாவிரதம் இருந்து உயிர் தியாகம் செய்த மாவீரன் திலீபனின் தியாகத்தை விற்கும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியை துரத்துவோம்” என குறிப்பிடப்பட்டுள்ளது.

எனினும் குறித்த சுவரொட்டிகளை மன்னார் மாவட்டத்தில் இராணுவ புலனாய்வாளர்களே ஒட்டியுள்ளதாக மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here