கடந்த மூன்று தினங்களுக்கு முன்னர், மூன்று பிள்ளைகளின் தாய் ஒருவர் குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக விரத்தியடைந்து தனக்குதானே தீ வைத்து எரிகாயங்களுடன் பருத்தித்துறை ஆதார வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
கணவனுடன் ஏற்பட்ட கருத்து முரண்பாடு காரணமாக கடந்த செவ்வாய்க்கிழமை (10) இரவு தனக்குத்தானே தீ மூட்டி தவறான முடிவெடுத்த நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டிருந்த நிலையில் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று சனிக்கிழமை (14) அதிகாலை உயர்ந்துள்ளார்.
இம் மரணம் தொடர்பில் யாழ். போதன வைத்தியசாலை திடீர் மரண விசாரணை அதிகாரி அன்ரலா விஞ்சன்தயான் விசாரணைகளை மேற்கொண்ட பின்னர் சடலம் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டது
இச் சம்பவத்தில் வடமராட்சி கற்கோவளம் பகுதியைச் சேர்ந்த கர்ணிகா குமரன் வயது 29 என்ற மூன்று பிள்ளைகளின் இளம் தாய் இவ்வாறு உயிரிழந்தவர் ஆவார்
குறித்த பெண்ணுக்கு ஐந்து வயதுக்குட்பட்ட மூன்று குழந்தைகளும் அதில் கடைசி பிள்ளைக்கு 11 மாதங்கள் ஆன நிலையில் இத் துயர சம்பவம் இடம்பெற்றுள்ளது
இச் சம்பவம் அப்பகுதியில் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.
சம்பவம் தொடர்பாக பருத்தித்துறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதேவேளை, வீட்டில் குப்பை கொழுத்திய போது எதிர்பாராத வகையில் ஆடையில் தீ பற்றி எரிந்த தீயினால் காயமடைந்த பெண் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
கடந்த 7ம் திகதி பிற்பகல் 5 மணியளவில் வீட்டில் இருந்த குப்பையினை மண்ணெண்ணெய் ஊற்றி கொழுத்திய போது அவரது ஆடையில் தீப்பற்றியுள்ளது.
இதையடுத்து சாவகச்சேரி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
அங்கு சிகிச்சை வழங்கப்பட்டு வந்த நிலையில் கடந்த 12ம் திகதி பிற்பகல் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
சங்கத்தானை, சாவகச்சேரியை சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தாயான சுகந்தன் தயாபரி (வயது-37) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த மரணம் தொடர்பில் யாழ் போதனா வைத்தியசாலையின் திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் விசாரணைகளை மேற்கொண்டு பிரேத பரிசோதனையின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது