துவாரகா தொடர்பாக விடுதலைப் புலிகளின் பெயரில் வெளிவரும் போலி அறிக்கைகள்!!

அண்மைக்காலமாக விடுதலைப் புலிகள் அமைப்பின் அரசியல் துறையின் பெயரிலும், அந்த அமைப்பின் வேறு சில கட்டமைப்புகளின் பெயர்களிலும் வெளியிடப்பட்டுவருகின்ற ‘போலி’ அறிக்கைகள் புலம்பெயர் மக்களைக் குழப்பத்தில் ஆழ்த்தி வருவகின்றன.

குறிப்பாக தலைவர் பிரபாகரன், அவரது மனைவி மற்றும் மகள் துவாரகா போன்றோர் உயிருடன் இருப்பதாகக் கூறி அந்தப் போலி அறிக்கைகள் தயாரிக்கப்பட்டு சமூக ஊடகங்கள் மத்தியில் உலாவ விடப்பட்டு வருகின்றன.

ஊடங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்ற அந்த அறிக்கைகளில் இடப்பட்டுள்ள கையொப்பங்களுக்கு உரியவர்களை உறுதிப்படுத்தத் தொடர்புகொண்டபோதுதான் அந்த அறிக்கைகள் அனைத்தும் போலியானவை என்று தெரியவந்தது.

புலம்பெயர் தமிழ் மக்களை ஒரு குழப்பநிலைக்குள் வைத்திருக்கும் நோக்கத்துடனும், ஒரு முக்கியஸ்தர்களினது இருப்புத் தொடர்பான ஒரு போலி பிம்பத்தைக் கட்டமைக்கும் நோக்கத்துடனும், புலம்பெயர் மக்களைக் குறிவைத்து ஒரு சதி நகர்வொன்றை மேற்கொள்ளும் நோக்கத்துடனும் இதுபோன்ற போலி அறிகைகள் உலாவ விடப்படுவது தெரியவருகின்றது.

விடுதலைப் புலிகளின் தடை நீக்கத்திற்கான முயற்சிகளில் புலம்பெயர் அமைப்புக்கள் முயற்சிகளை மேற்கொண்டுவருகின்ற இந்தக் காலகட்டத்தில், அந்த முயற்சிகளைக் குழப்பும் சதியும் இதுபோன்ற கடிதங்களின் பின்னணியில் இருப்பதாகத் தெரிவிக்கின்றார்கள் சில புலம்பெயர் செயற்பாட்டாளர்கள்

துவாரகா தொடர்பாக விடுதலைப் புலிகளின் பெயரில் வெளிவரும் போலி அறிக்கைகள்!! - Lanka News - Tamilwin News துவாரகா தொடர்பாக விடுதலைப் புலிகளின் பெயரில் வெளிவரும் போலி அறிக்கைகள்!! - Lanka News - Tamilwin News துவாரகா தொடர்பாக விடுதலைப் புலிகளின் பெயரில் வெளிவரும் போலி அறிக்கைகள்!! - Lanka News - Tamilwin News

https://tamiliz.com/realme-11x-5g-price-and-specifications/

மேலும் அறிய  கண் வைத்தியர் தனியார் விடுதியில் சடலமாக மீட்பு!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here