தொலைபேசியில் பேசியபடி வீதியை கடந்த மாற்றுத்திறனாளியின் காதை வெட்டிய நபர்

பதுளை – மெட்டிகஹதென்ன பிரதேசத்தில் விசேட தேவையுடைய ஒருவர் தொலைபேசியில் பேசிக் கொண்டு வீதியைக் கடப்பதைக் கண்ட இன்னுமொரு இளைஞர், குறித்த நபரின் காதை துண்டித்த சம்பவம் நேற்று பதிவாகியுள்ளது.

பாதசாரி கடவையின் நடுவில் வைத்து தனது கையடக்கத் தொலைபேசிக்கு வந்த அழைப்புக்குப் பதிலளித்தமையால், கோபமடைந்த மற்றுமொரு நபர், தான் வைத்திருந்த கத்தியைக் கொண்டு அவரின் காதை துண்டித்துள்ளார்.

பாதிக்கப்பட்டவர் விசேட தேவையுடையவர் என்றும் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விசேட தேவையுடையவரின் காதை துண்டித்தவர், அவரை நிலத்தில் வீழ்த்தி தாக்குதல் நடத்தியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில், சம்பவத்தின் பின்னர் தப்பிச்சென்ற தாக்குதல்தாரியை பொலிஸார் தேடி வருகின்றனர்.