தொலைபேசி கேட்ட மகள், கொடுக்க மறுத்த தாய்!! 16 வயது மாணவி தூக்கிட்டு தற்கொலை

கொக்கட்டிச்சோலை பொலிஸ்பிரிவிற்குட்பட்ட காஞ்சிரங்குடா பிரதேசத்தில் மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கடந்த (12) இடம் பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குருந்தையடிமுன்மாரி காஞ்சிரங்குடா பிரதேசத்தைச் சேர்ந்த (16) வயதுடைய கிஸ்ணமூர்த்தி ரணித்தா என்பவரே இவ்வாறு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டவராவார்.

சம்பவ தினத்தன்று வழமை போல பாடசாலைக்கு சென்று வீடு திரும்பிய நிலையில் தாயாரிடம் கையடக்க தொலைபேசியை கேட்ட போது யுவதியின் தாயார் தொலைபேசியை கொடுக்க மறுத்ததாகவும் தாயார் உறவினர் ஒருவரின் வீட்டுக்கு சென்று வீடு திரும்பிய போது வீட்டின் அறையினுள் தூக்கிட்ட நிலையில் தூக்கில் இருந்து உறவினர்கள் மீட்டெடுத்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதித்தபோது சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.

கொக்கட்டிச்சோலை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் வேண்டுதலுக்கமைவாக சம்பவ இடத்திற்கு சென்ற மண்டூர் பிரதேச திடீர் மரண விசாரணை அதிகாரி தம்பிப்பிள்ளை தவக்குமார் சடலத்தை பார்வையிட்ட பின்னர் உடற்கூற்று பரிசோதனைக்கு உட்படுத்தும் படி சட்ட வைத்திய அதிகாரியிடம் பரிந்துரைத்தார்.

விசாரணைகளின் பின்னர் சடலத்தை உறவினர்களிடம் கையளிக்கும் படி பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.

மேலதிக விசாரணைகளை கொக்கட்டிச்சோலை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here