உரிமையாளர்கள் வீட்டிலில்லாத போது வீட்டு கூரையை உடைத்து நகைகளைக் கொள்ளையிட்ட 4 இளைஞர்களைக் காத்தான்குடி பொலிஸார் கைது செய்துள்ளதாக தெரிவித்தனர்.
மட்டக்களப்பு காத்தானகுடி பொலிஸ் பிரிவிலுள்ள டீன் வீதியில் வீடொன்றின் உரிமையாளர்கள் கொழும்புக்குச் சென்றிருப்பதை அறிந்த திருடர்கள் வீட்டின் கூரை மீது ஏறி கூரையை உடைத்து அலுமாரியை நகைகளையும் 2000ரூபாய் பணத்தையும் திருடிச் சென்றுள்ளனர்.
மேலும் திருடப்பட்ட நகைகளை மூதூரிலுள்ள நகைக்கடையொன்றில் விற்பனை செய்துள்ள நிலையில் அக்கடையிலிருந்து நகைகள் மீட்கப்பட்டதுடன் நகை கடை உரிமையாளரும் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டுள்ள காத்தான்குடியைச் சேர்ந்த 23, 19, 17, 19 ஆகிய வயதுடைய நான்கு நபர்களையும் மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்படவுள்னதாக பொலிஸார் தெரிவித்தனர்.
காத்தான்குடி பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.