நல்லூரில் எதையேனும் தவறவிட்டீர்களா?

நல்லூர் கந்தசுவாமி ஆலய மகோற்சவ திருவிழாக்களின் போது பொதுமக்களால் தவறவிடப்பட்ட பெறுமதியான சில பொருட்கள் யாழ். மாநகர சபையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும், அவற்றை அடையாளம் காட்டி பெற்றுக்கொள்ள முடியும் எனவும் யாழ். மாநகர சபை ஆணையாளர் த. ஜெயசீலன் அறிவித்துள்ளார்.

மகோற்சவ திருவிழாக்களில் கலந்துகொண்ட பக்தர்களால் தவறவிடப்பட்ட பெறுமதி வாய்ந்த பொருட்கள், ஆவணங்கள், வங்கிப்பரிவர்த்தனை அட்டைகள், பணப்பைகள், மணிக்கூடு, தேசிய அடையாள அட்டை, திறப்புக்கள் முதலியன யாழ்ப்பாணம் மாநகர சபையின் உற்சவ காலப் பணிமனையில் ஒப்படைக்கப்பட்டு, தற்போது மாநகர சபை அலுவலகத்தில் உள்ளன.

இவற்றின் உரிமையாளர்கள் தகுந்த ஆதாரங்களுடன் உரிய அடையாளத்தை உறுதிப்படுத்தி மாநகர சபையின் நிர்வாக கிளையில் பிற்பகல் 2.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை பெற்றுக்கொள்ள முடியும் என அறிவித்துள்ளார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here