நான்கரை கோடி ரூபாய் ஹசீஸ் சிக்கியது

நான்கரை கோடி 20 இலட்சம் ரூபாய் பெறுமதியான 35 கிலோ கிராம் ஹசீஸ் போதைப்பொருள் ஒருகொடவத்தை சுங்க வருமான கண்காணிப்பு பிரிவின் பரிசோதனை நிலையத்தில் கைப்பற்றப்பட்டுள்ளதாக சுங்க ஊடகப் பேச்சாளர் சிவலி அருக்கொட தெரிவித்தார்.

இந்த போதைப்பொருள் 05 பொதிகளாக பொதியிடப்பட்டு, இத்தாலியில் இருந்து கட்டுநாயக்க விமான சரக்கு முனையத்திற்கு விமான அஞ்சல் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

இந்த சந்தேகத்திற்கிடமான பொதிகள் ஒருகொடவத்தை சுங்க வருவாய் கண்காணிப்பு பிரிவின் ஆய்வு கூடத்திற்கு கொண்டு செல்லப்பட்டு சோதனை செய்யப்பட்டன.

இந்த பொதிகள், விமான சரக்குகளை வீட்டிற்கு கொண்டு செல்லும் முகவர் நிலையத்தால் பெறப்பட்டது. இந்த பொதிகளை கொண்டுச்சேர்க்கவேண்டிய முகவரிகள் எதுவும் இல்லை மற்றும் பொதிகளின் உரிமையாளர்களின் அலைபேசி எண்கள் மட்டுமே உள்ளன.

ஹசீஸ் போதைப்பொருளை கைப்பற்றிய சுங்க வருவாய் கண்காணிப்பு திணைக்கள அதிகாரிகள் மேலதிக விசாரணைகளுக்காக அந்த போதைப்பொருளை பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரிடம் ஒப்படைத்துள்ளனர்.

மேலும் அறிய  கண் வைத்தியர் தனியார் விடுதியில் சடலமாக மீட்பு!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here