நீண்ட காலமாக போதைக் குளிசைகளை மாணவர்களுக்கு விநியோகித்து வந்தவர் கைது

நீண்ட காலமாக பாடசாலை மாணவர்களுக்கு போதைக் குளிசைகளை விநியோகித்து வந்த சந்தேக நபர் தொடர்பில் – கல்முனை விசேட அதிரடிப்படையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

அம்பாறை மாவட்டம் – கல்முனை விசேட அதிரடிப்படை முகாமுக்குக் கிடைக்கப்பெற்ற ரகசிய தகவல் ஒன்றினை அடுத்து, நேற்று புதன்கிழமை (25) இரவு – காரைதீவு பிரதான வீதியில் வைத்து சந்தேக நபரை 500 போதை குளிசைகளுடன் விசேட அதிரடிப்படையினர் கைது செய்தனர்.

சந்தேக நபர் அம்பாறை – திசாபுர பகுதியை சேர்ந்த 28 வயது மதிக்கத்தக்கவராவார். அவர் வசமிருந்து 500 போதை குளிசைகள் உட்பட, அவர் பாவித்த கைத்தொலைபேசி என்பனவும் கைப்பற்றப்பட்டன.

பின்னர் சான்றுப் பொருட்களுடன் சந்தேக நபரை – காரைதீவு பொலிஸாரிடம் நீதிமன்ற நடவடிக்கைக்காக அதிரடிப்படையினர் பாரப்படுத்தினர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here