நீ தமிழனா நீ தமிழனா எனக்கேட்டு கேட்டு தாக்கிய சிங்களக் காடையர்கள்

தியாகதீபத்தின் ஊர்தியை திருகோணமலை கப்பல்துறை இராணுவ முகாம் முன்பாக வைத்து வழிமறித்த 50க்கும் மேற்பட்ட காடையர்கள் ஊர்தியின் மீதும் அதில் வந்தவர்கள் மீதும் தாக்குதல் நடத்தியுள்ளார்கள்.

ஊர்தியில் பாராளுமன்ற உறுப்பினரான செல்வராசா கஜேந்திரன், சட்டத்தரணி காண்டீபன் மற்றும் செயற்பாட்டாளரான கண்ணன் ஆகியோர் தியாகதீபத்தின் படம் பொறிக்கப்பட்ட ரீசேட்களை அணிந்திருந்ததனால் உடனடியாகவே அவர்களை இனங்கண்டு தாக்குதல் நடாத்தப்பட்டது.

ஏனையோர் சாதாரண உடையில் நின்றிருந்தால் காடையர்களுக்கு அவர்களை இனங்காண முடியாமல் போய்விட்டது. இதனால் அவ்விடத்தில் நின்றவர்களை நீ தமிழனா நீ தமிழனா என கேட்டுகேட்டு தாக்குதல் நடத்தியுள்ளார்கள்.

1983ம் ஆண்டு கறுப்புயூலை இனப்படுகொலையின் போதும் தென்பகுதிகளில் உள்ள மக்களை நீ தமிழனா நீ தமிழனா என கேட்டுக்கேட்டு தாக்கிகொலை செய்திருந்தார்கள். அதேபோன்றதொரு சம்பவமே மீள நடைபெற்றுள்ளது.

இந்த நாட்டில் தமிழர் தங்கள் அடையாளங்களை கைவிட்டு, அடிமைகளாக வாழுவதென்றால் வாழலாம் தமிழராக வாழுவதென்றால் வாழமுடியாதென்பதையே இச்சம்பவம் உணர்த்தியிருக்கிறது.

நீ தமிழனா நீ தமிழனா எனக்கேட்டு கேட்டு தாக்கிய சிங்களக் காடையர்கள் - Lanka News - Tamilwin News நீ தமிழனா நீ தமிழனா எனக்கேட்டு கேட்டு தாக்கிய சிங்களக் காடையர்கள் - Lanka News - Tamilwin News நீ தமிழனா நீ தமிழனா எனக்கேட்டு கேட்டு தாக்கிய சிங்களக் காடையர்கள் - Lanka News - Tamilwin News நீ தமிழனா நீ தமிழனா எனக்கேட்டு கேட்டு தாக்கிய சிங்களக் காடையர்கள் - Lanka News - Tamilwin News

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here