நுரைச்சோலையில் பரபரப்பு சம்பவம்: இரத்தக்கறைகளுடன் பெண்ணொருவர் சடலமாக மீட்பு!

நுரைச்சோலைப் பொலிஸ் பிரிவிற்குற்பட்ட சேத்தாப்பொலை கடற்கரைப் பகுதியில் பெண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

மீன்பிடிப்பதற்கு கடலுக்குச் சென்றவர்கள் இவ்வாறு சடலம் ஒன்று காணப்பட்டதை அவதானித்த நிலையில் நுரைச்சோலைப் பொலிஸாருக்குத் தகவலை வழங்கியுள்ளனர்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் வருகைத் தந்து சடலத்தைப் பார்வையிட்டதோடு தடவியல் பொலிஸார் வரவழைக்கப்பட்டுள்ளனர்.

இதன்போது சடலம் காணப்பட்ட 50 மீற்றர் தொலைவில் இரத்தக்கறைகள் காணப்பட்டதை அவதானிக்கப்பட்டது.

இது கொலையாக இருக்கலாமென்று தடவியல் பொலிஸார் சந்தேகிப்பதாகத் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் நுரைச்சோலைப் பொலிஸார் மற்றும் தடவியல் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகத் தெரிவித்தனர்.

https://tamiliz.com/qimhai-smartphone-unlocked-cell-phones-s22-ultra-6-7in-hd-screen-the-black-phone-2gb-16gb-android-10-straight-talk-phone-6800mah-128gb-extension-dual-sim-boost-mobile-phones-telefonos-rose-gold/

மேலும் அறிய  கண் வைத்தியர் தனியார் விடுதியில் சடலமாக மீட்பு!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here