நுவரெலியாவில் விபத்து – இருவர் படுகாயம்!

நுவரெலியாவில் பேருந்தும், உந்துருளியும் நேருக்கு நேர் மோதி இடம்பெற்ற விபத்தில் இருவர் காயமடைந்துள்ளனர்.

நுவரெலியா – பதுளை பிரதான வீதியில், நுவரெலியா மாநகரசபை மைதானத்திற்கு முன்பாகவே நேற்றிரவு இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

உந்துருளியில் பயணித்த இருவரே படுகாயமடைந்த நிலையில் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

நுவரெலியாவில் விபத்து – இருவர் படுகாயம்! - Lanka News - Tamilwin News

வெளிமடையிலிருந்து நுவரெலியாவை நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபை பேருந்துடன், நுவரெலியாவில் இருந்து பொரகஸ் பிரதேசத்தை நோக்கி பயணித்த உந்துருளி மோதியுள்ளது.

இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை, நுவரெலியா போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here