தெஹிவளை பிரதேசத்தில் தனது 14 வயது மகளை கடுமையாக வன்புணர்வு செய்த தந்தையொருவர் தெஹிவளை பொலிஸாரால் (15) கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சந்தேக நபரின் தந்தை தெஹிவளை வனரதன வீதியில் வசிக்கும் 46 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தை எனவும் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானவர் எனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
தாயும் மகளும் அறையில் படுக்கையில் தூங்குவதைக் கண்ட தந்தை தரையில் பாயில் தூங்கிக் கொண்டிருந்தார். தாய் வேலைக்காக அதிகாலையில் சென்றுள்ளார், அந்த நேரத்தில் தந்தை படுக்கையில் வந்து மகளை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
மகள் அனைத்துத் தகவல்களையும் கடிதத்தில் எழுதி வைத்துவிட்டு காலையில் பாடசாலைக்குச் சென்றதாகவும், தாய் திரும்பி வந்து கடிதத்தைப் படித்துவிட்டு தெஹிவளை பொலிஸில் முறைப்பாடு செய்ததாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
அதன்படி அன்றைய தினம் தந்தையை கைது செய்த பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்ததுடன், துஷ்பிரயோகத்திற்கு உள்ளான மகள் கொழும்பு தெற்கு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.