பதினைந்து வயது மாணவனை பாலியல் துஷ்பிரயோகம் செய்த ஆசிரியை கைது

பதினைந்து வயது மாணவனை பாலியல் துஷ்பிரயோகம் செய்த சந்தேகத்தின் பேரில் 27 வயதுடைய ஆசிரியர் ஒருவரை வெலிகம பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இது தொடர்பில், மாணவனின் தாய் வெலிகம பொலிஸில் முறைப்பாடு செய்திருந்தார்.

இந்த மாணவன், குறித்த சந்தேக நபரால் தனது வீட்டில் நடத்தப்பட்டதாக கூறப்படும் பயிற்சி வகுப்புக்கு சென்று வந்துள்ளார்.

இம்மாதம் 6ஆம் திகதி பயிற்சி வகுப்பிற்குச் சென்ற மாணவன் வீடு திரும்பாததால் மாணவனின் தாய், பயிற்சி வகுப்பு நடைபெறும் வீட்டுக்குச் சென்றுள்ளார்.

ஆசிரியர் வீட்டில் இல்லை என சந்தேக நபரின் தெரிவித்துள்ளார்.

ஆசிரியை மற்றும் அவரது மகன் அங்கு இல்லாததை அறிந்த அவர், பொலிசில் முறைப்பாடு செய்ததாக கூறப்படுகிறது.

உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த வெலிகம பொலிஸார் இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

சந்தேக நபர் சிறுவனை பாலியல் நடவடிக்கைகளுக்காக அழைத்துச் சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது.

பின்னர் கடந்த 12ஆம் திகதி வெலிகம பொலிஸாரின் நோட்டீசுக்கு அமைய சிறுவனும் சந்தேக நபரும் பொலிஸாரிடம் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.

சந்தேக நபர் தன்னை கொழும்பு மற்றும் கண்டி பிரதேசங்களில் உள்ள ஹோட்டல்களுக்கு அழைத்துச் சென்றதாக இங்கு சிறுவன் தெரிவித்துள்ளார்.

இந்த வாக்குமூலத்தின் அடிப்படையில் சந்தேக நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்

மேலும் அறிய  கண் வைத்தியர் தனியார் விடுதியில் சடலமாக மீட்பு!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here