பதின்ம வயது சிறுமி இரண்டு வருடங்களாக 10 பேரால் பலாத்காரம்; இலங்கையில் கொடுமை

இரண்டு வருடங்களாக தாய் மற்றும் தந்தை வழி உறவினர்கள் குழுவினால் 15 வயது மாணவி வன்புணர்வுக்கு உள்ளான சம்பவம் பெரும் அதிச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கண்டி அருப்பொல பகுதியைச் சேர்ந்த சிறுமியை , 13 வயது முதல் பாலியல் துன்புறுத்தலுக்கு இவர்கள் உள்ளாகி வந்துள்ளமை சிறுமியின் வாக்குமூலங்களின் அடிப்படையில் விசாரணைகளை ஆரம்பித்துள்ள புலனாய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

சிறுமியின் அத்தைகளில் ஒருவர் இந்த செயலுக்கு தலைமைதாங்கி செயல்பட்டு வந்துள்ளதாக அந்த தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் சம்பவம் தொடர்பில் கண்டி காவல்துறையின் சிறுவர் மற்றும் மகளிர் பணியகம் விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

மேலும் அறிய  கண் வைத்தியர் தனியார் விடுதியில் சடலமாக மீட்பு!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here