பல்கலைகழக மாணவியை காட்டுக்குள் வைத்து நாசம் செய்த சின்னையாவுக்கு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

சிங்கபூரில் பல்கலைக்கழக மாணவியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த இந்திய இளைஞனுக்கு அந்நாட்டு நீதிமன்றம் 16 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்துள்ளது.

இதேவேளை குறித்த இளைஞனுக்கு 12 கசையடிகளுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

பல்கலைக்கழக மாணவியை கடத்திச் சென்றமை மற்றும் உடமைகளைத் திருடிய குற்றத்துக்காக அந்த இளைஞனும் நீதிமன்றில் குற்றவாளியாகக் அறிவிக்கப்பட்டுள்ளார்.

சிங்கப்பூரில் துப்புரவுப் பணியாளராகப் பணிபுரிந்து வந்த 26 வயதுடைய சின்னையா என்பவருக்கே இவ்வாறு தண்டனை விதிக்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

2019 ஆம் ஆண்டு மே மாதம் 4 ஆம் திகதி இரவு பல்கலைக்கழக மாணவி பாலியல் துஷ்பிரயோகத்திற்கு ஆளானதாக கூறப்படுகின்றது.

அன்று இரவு பேருந்து நிலையத்திற்குச் சென்று கொண்டிருந்த போது துரத்திச் சென்று தாக்கி காட்டுப் பகுதிக்கு இழுத்துச் சென்று பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக கூறப்படுகிறது.

குறித்த நபர் பல நாட்களாக அவரை பின்தொடர்ந்து வந்துள்ளார் என்பதும் தெரியவந்துள்ளது.

இவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது அவரது காதலனால் கூட அடையாளம் காண முடியாத அளவுக்கு முகத்தில் காயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன் காரணமாக சந்தேகநபரின் மனநிலை தொடர்பில் மருத்துவ அறிக்கைகள் தேவைப்பட்டதாகவும், அதற்கு சுமார் 4 ஆண்டுகள் எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இது தொடர்பான அறிக்கைகள் கிடைத்த பின்னர் நீதிமன்றம் இந்த தீர்ப்பை வழங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

மேலும் அறிய  மலையகத்தில் பாடசாலை மாணவியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த ஆசிரியருக்கு நீதிமன்று அதிரடி தீர்ப்பு..!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here