பாடசாலை மாணவர்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தி தாக்கிய போலிசார்

சிவில் உடையில் இருந்த ஈச்சிலம்பற்று பொலிசாரினால் வெருகல் முருகன் ஆலயத்திற்கு சென்று வீடு திரும்பிய மாணவர்கள் உள்ளாடை களையப்பட்டு சோதனையிடப்பட்டதுடன் தாக்கப்பட்டுள்ளதாகவும் தெரிய வருகின்றது இச்சம்பவம் நேற்று (02.09.2023) அதிகாலை 2.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

வெருகல் பிரதேசத்தில் பிரசித்திபெற்ற வெருகலம்பதியான் முருகன் ஆலயத்தில் வருடார்ந்த திருவிழா நடைபெற்று வருகின்ற நிலையில் மாவடிச்சேனை கிராமத்தைச் சேர்ந்த மாவடிச்சேனை பாடசாலையில் 09, 10, 11 ஆம் ஆண்டுகளில் கல்வி கற்று வரும் மாணவர்கள் 08 பேர் கோயில் திருவிழாவிற்கு சென்று 02.09.2023 நள்ளிரவு 02:30 மணியளவில் தமது வீடுகளுக்கு திரும்பிக் கொண்டிருந்தபோது சிவில் உடையில் நின்ற ஈச்சிலம்பற்று பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த இரண்டு பொலிஸ் அதிகாரிகள் மாணவர்களை வீதியில் வைத்து தடுத்து நிறுத்தி சோதனையிட்டுள்ளனர்.

இதன்போது ஒரு மாணவனின் காற்சட்டை மற்றும் உள்ளாடைகளை நீக்கி சோதனையிட்டுள்ளதுடன் இரண்டு மாணவர்களின் கன்னங்களில் அறைந்தும் துரத்தி விட்டுள்ளனர்.

இது தொடர்பாக 02.09.2023 அன்று மாலை மாணவர்களின் பெற்றோர்கள் ஈச்சிலம்பற்று பொலிஸ் நிலையத்திற்கு முறைப்பாடு செய்ய சென்ற போது மாணவர்களை தாக்கிய பொலிஸ் அதிகாரி விடுமுறையில் சென்றுள்ளதால் 03.09.2023 அன்று காலை பொலிஸ் நிலையம் வரும்படி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி திருப்பி அனுப்பியுள்ளதாக பெற்றோர்கள் தெரிவிக்கின்றனர்.

இன்றையதினம் ஈச்சிலம்பற்று பொலிஸ் நிலையத்திற்கு குறித்த மாணவர்களும், பெற்றோர்களும் சென்று குறித்த விடயம் தொடர்பாக முறையிட்டபோது குறித்த பொலிஸ் அதிகாரி மாணவர்களிடமும், பெற்றோர்களிடமும் மன்னிப்புக் கேட்டதைத் தொடர்ந்து இரு தரப்பினரும் சமாதானமாக போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் அறிய  யாழ் வருடாந்த பொலிஸ் அணிவகுப்பும்-பரிசோதனையும்..!{படங்கள்}

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here