பாடசாலை விளையாட்டு போட்டியில் 76 மாணவர்களுக்கு நேர்ந்த கதி..!

பசறை பொது மைதானத்தில் இன்று (20) இடம்பெற்ற இல்லங்களுக்கு இடையிலான தடகளப் போட்டியின் போது குளவி கொட்டுக்கு பலர் இலக்காகியுள்ளனர்.

குளவி கொட்டுக்கு இலக்கான 76 மாணவர்கள் பசறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட வைத்திய அதிகாரி சானக கங்கந்த தெரிவித்தார்.

இந்நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 50 மாணவர்கள் சிகிச்சை பெற்று வைத்தியசாலையில் இருந்து வெளியேறியுள்ளதாகவும் மேலும் 26 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருவதாகவும் எமது செய்தியாளர் குறிப்பிட்டார்.

இல்லங்களுக்கு இடையிலான விளையாட்டு போட்டி நடைபெற்ற மைதானத்திற்கு சற்று தொலைவில் உள்ள காட்டுப்பகுதியில் உள்ள குளவி கூடு ஒன்றின் மீது மாணவர்கள் குழு ஒன்று கற்களை வீசி தாக்குதல் நடத்தியதால் இந்த அசம்பாவிதம் நடைபெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.