பாண் கொள்வனவு செய்த பெண்ணிற்கு காத்திருந்த அதிர்ச்சி

மாத்தறையில் கடை ஒன்றில் பெண் ஒருவர் கொள்வனவு செய்த பாணில் பீடித் துண்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மாத்தறை பம்புரனை பிரதேசத்தில் நேற்று மாலை இச் சம்பவம் இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரண்டு பாண்களை அப் பெண் கொள்வனவு செய்த பாண் துண்டு ஒன்றை வெட்டும் போதே அந்த பீடித்துண்டை அவதானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

” முதலில் கறிவேப்பிலை என நினைத்து நசுக்கிய போது அது பீடி என தெரியவந்தது. பின்னர் நன்றாக வெளியே எடுத்து பார்க்கும் போது பீடியின் பெரிய துண்டு ஒன்று கிடந்துள்ளது” என்று அப் பெண் தெரிவித்துள்ளார்.

இதனால் கடும் அதிருப்தியடைந்த பெண் இனிமேல் பாண் சாப்பிடுவதையே நிறுத்திவிட்டதாக குறிப்பிட்டுள்ளார்.

இது போன்ற சம்பவங்கள் இனி நடக்காமல் இருக்க வேண்டுகிறேன். உணவு உற்பத்தியில் பேக்கரி உரிமையாளர்கள் பொறுப்பாக செயற்பட வேண்டும் என அவர் கூறியுள்ளார்.

இது தொடர்பில் பொது சுகாதார பரிசோதகருக்கு தொலைபேசி ஊடாக அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை சுகாதாரப் பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.

பாண் கொள்வனவு செய்த பெண்ணிற்கு காத்திருந்த அதிர்ச்சி - Lanka News - Tamilwin News பாண் கொள்வனவு செய்த பெண்ணிற்கு காத்திருந்த அதிர்ச்சி - Lanka News - Tamilwin News பாண் கொள்வனவு செய்த பெண்ணிற்கு காத்திருந்த அதிர்ச்சி - Lanka News - Tamilwin News

மேலும் அறிய  இலங்கை இளைஞர்கள் தொடர்பில் சற்று முன் சத்திர சிகிச்சை வைத்தியர் சொன்ன அதிர்ச்சி தகவல்..!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here