பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளான காப்புறுதி நிறுவன பெண் ஊழியர்கள்

காப்புறுதி நிறுவனம் ஒன்றின் பெண் ஊழியர்கள் மூவரை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் இரு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

புத்தளம் பிரிவு சிறுவர் மற்றும் பெண்கள் பணியகத்திற்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் சந்தேகநபர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் புத்தளம் பகுதியைச் சேர்ந்த 33 மற்றும் 45 வயதுடையவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபர்கள் நேற்று புத்தளம் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் 5 லட்சம் ரூபாய் சரீர பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

புத்தளம் பிரிவு சிறுவர் மற்றும் பெண்கள் பணியகம் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.

மேலும் அறிய  பாடசாலை மாணவியை பல தடவை வன்புணர்ந்த ஆசிரியருக்கு நேர்ந்த கதி