பிரதேசசெயலக பெண் உத்தியோகத்தர் நிர்வாணப் படங்களை வைத்து கள்ளக்காதலன் திருவிளையாடல்

பெண் அரச அதிகாரி ஒருவரின் நிர்வாணப் புகைப்படங்களை இணையத்தில் வெளியிடுவதாக அவரின் முன்னாள் காதலன் மிரட்டிய சம்பவம் பதாவி, ஸ்ரீபுர பகுதியில் இடம்பெற்றுள்ளது.

தான் கேட்ட பணத் தொகையை தராவிட்டால் குறித்த பெண்ணின் நிர்வாணப் படங்களை அந்தப் பெண்ணின் கணவனுக்கு அனுப்புவதோடு இணையத்திலும் வெளியிடுவதாக சந்தேக நபர் கூறியுள்ளார்.

சம்பவம் தொடர்பாக குறித்த பெண் ஸ்ரீபுரா பொலிஸ் நிலையத்திற்கு முறைப்பாடு அளித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்

2019 ஆம் ஆண்டு முதல் சந்நேக நபரின் வங்கிக் கணக்கில் ரூபாய் 2.6 மில்லியனுக்கும் அதிகமான பணத்தை வைப்பு செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாக குறித்த பெண் தெரிவித்துள்ளார்.

சில வருடங்களுக்கு முன்னர் குளியாப்பிட்டிய பகுதியைச் சேர்ந்த குறித்த சந்தேக நபரும் இந்தப் பெண்ணும் காதலித்து வந்துள்ளனர், அந்த சமயத்தில் குறித்த பெண்ணை நிர்வாணமாக அவர் படம் பிடித்துள்ளார்.

இருவரும் பிரிந்ததிலிருந்து, சந்தேக நபர் பணம் கேட்டு வருவதாகவும் பணம் தராத பட்சத்தில் அந்த நிர்வாணப்படங்களை இணையத்தில் வெளியிடுவதாகவும் மிரட்டியதாக பாதிக்கப்பட்ட பெண் முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்

சந்தேக நபரைக் கைது செய்வதற்காக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்