பிரபல பாடசாலை மாணவிகளுக்கு பாலியல் தொல்லை; ஆசிரியர் கைது!

ஐந்தாம் ஆண்டில் கல்வி கற்கும் பதினொரு மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு செய்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குருணாகல் நகரில் உள்ள கலவன் பாடசாலை ஒன்றில் ஆங்கிலம் கற்பிக்கும் ஆசிரியர் ஒருவர் சம்பவத்தில் பொத்துஹெர பிரதேசத்தில் வசிக்கும் ஐம்பத்தைந்து வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையான சந்தேகத்துக்குரிய ஆசிரியர் மீது பெற்றோர்கள் முறைப்பாடு செய்துள்ளனர்.

பிரபல பாடசாலை மாணவிகளுக்கு பாலியல் தொல்லை; ஆசிரியர் கைது! - Lanka News - Tamilwin Newsஅந்த முறைப்பாட்டின் அடிப்படையில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர் தனது பாடத்தை கற்பிக்கும்போது வகுப்பில் உள்ள மாணவிகளின் உடலை தொட்டு, அழுத்தி, அந்தரங்க உறுப்புகளை தொட்டு துஷ்பிரயோகம் செய்ததாகவும் கூறப்படுகிறது.

பாதிக்கப்பட்ட மாணவிகள் இது தொடர்பில் பெற்றோரிடம் தெரிவித்ததையடுத்து, அவர்கள் குருணாகல் பொலிஸ் தலைமையகத்தின் சிறுவர் மற்றும் பெண்கள் பணியகத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.

மேலும் அறிய  மன்னாரை உலுக்கிய 10 வயது சிறுமியின் மரணம்-சற்று முன் வெளியான மேலதிக தகவல்..! {படங்கள்}

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here