புதிய விண்ணப்பங்கள் கோரல்.!

அஸ்வெசும உதவி வழங்கும் திட்டத்துக்கான புதிய விண்ணப்பங்கள் நாளை (10) முதல் கோரப்பட உள்ளன.

மேலும் 400இ000 பயனாளிகளை தேர்வு செய்வதற்காக இந்த விண்ணப்பங்கள் கோரப்பட உள்ளன.

பல்வேறு தரப்பினரின் பரிந்துரைகளின் அடிப்படையில், பயனாளிகளைத் தேர்ந்தெடுப்பதற்கான சில நிபந்தனைகள் திருத்தப்படும் என்று நிதி இராஜாங்க அமைச்சு தெரிவித்துள்ளது.

‘அஸ்வெசும’ பயனாளிகளின் மொத்த எண்ணிக்கையை 2 மில்லியன் ஆக அதிகரிக்க அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.