புதைக்கப்பட்ட சிறுமியின் உடல் மாயம்! குடும்பத்தினரால் 20 இலட்சம் ரூபாய் சன்மானம் அறிவிப்பு

வவுனியா – இராசேந்திரங்குளம் மயானத்தில் புதைக்கப்பட்ட நிலையில் காணாமல்போன சிறுமியின் சடலத்தை மீள ஒப்படைத்தால் 20 இலட்சம் ரூபாய் சன்மானம் வழங்கப்படும் என சிறுமியின் பாட்டி குணரட்னம் ரோகினி தெரிவித்துள்ளார்.

வவுனியா ஊடக அமையத்தில் இன்று (19.09) ஊடகவியலாளருக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.மேலும் தெரிவிக்கையில்,

அத்துடன் இது தொடர்பில் துண்டு பிரசுரம் ஒன்றும் அவரால் வெளியிடப்பட்டு, விநியோகிக்கப்பட்டு வருகின்றது. இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

புதைக்கப்பட்ட சிறுமியின் உடல் மாயம்! குடும்பத்தினரால் 20 இலட்சம் ரூபாய் சன்மானம் அறிவிப்பு - Lanka News - Tamilwin News

கடந்த 25.08.2023 ஆம் திகதியன்று வவுனியா, பாரதிபுரம் பகுதியில் 2 வயது சிறுமி நீர்த்தொட்டியில் தவறி விழுந்து உயிரிழந்துள்ளார்.

இதனை தொடர்ந்து சிறுமியின் உடல் இராசேந்திரங்குளம் இந்து மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டிருந்த நிலையில், கடந்த 05.09.2023 அன்று சிறுமியின் உடல் அடையாளம் தெரியாத நபர்களால் தோண்டி எடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்டபான உண்மையான தகவல் தெரிந்தவர்கள் கீழ்கண்ட தொலைபேசி இலக்கத்திற்கு தகவல் வழங்கினால் 10 இலட்சம் சன்மானமாக வழங்கப்படும் எனவும், சிறுமியின் சடலத்தை தோண்டி எடுத்தவர்கள் மீள கையளிக்கின்ற போது 20 இலட்சம் சன்மானம் வழங்கப்படும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.

புதைக்கப்பட்ட சிறுமியின் உடல் மாயம்! குடும்பத்தினரால் 20 இலட்சம் ரூபாய் சன்மானம் அறிவிப்பு

இதேவளை, 0766091158 அல்லது 0754986953 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு தெரியப்படுத்துமாறும் தெரிவித்துள்ள நிலையில், சிறுமின் சடலத்தை காணவில்லை என நெளுக்குளம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

புதைக்கப்பட்ட சிறுமியின் புதைக்கப்பட்ட சிறுமியின்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here