வடமராட்சி நவிண்டில் பகுதியில் பாடசாலை மாணவி ஒருவர் புற்று நோய் காரணமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது
வடமராட்சி மத்திய மகளிர் கல்லூரியில் கல்வி கற்று வரும் குறித்த மாணவி புற்று நோயினால் பாதிக்கப்பட்டு கொழும்பு தேசிய வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்
தற்போது யாழ் போதனா வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி குறித்த மாணவி நேற்று செவ்வாய்க்கிழமை உயிரிழந்துள்ளார்
சம்பவத்தில் நவிண்டில் பகுதியைச் சேர்ந்த லோகராசா லோசனா வயது 17 என்ற மாணவியை இ்வ்வாறு உயிரிழந்தவர் ஆவார் இச் சம்பவம் அப்பகுதியில் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது