பெண்கள் வேடமணிந்து நள்ளிரவில் கல்வியன்காட்டில் தாக்குதல் | Tamilwin Online – தமிழ்வின் ஒன்லைன் Sri Lankan Tamil News Website | Latest Breaking News Online

யாழ்ப்பாணம் கல்வியங்காடு செங்குந்த வீதியில் உள்ள அரச உத்தியோகத்தர் ஒருவரது வீட்டின் மீது இரண்டு மோட்டார் சைக்கிளில் வந்த ஆறு பேர் கொண்ட காவாளி கும்பல் சேதம் விளைவித்தனர்.

இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலையில் பெண்களின் ஆடை அணிந்து வந்த ஒருவர் உட்பட ஆயுதங்களுடன் வந்த மர்ம கும்பலே அட்டூழியத்தில் ஈடுபட்டனர்.

பெண்கள் வேடமணிந்து நள்ளிரவில் கல்வியன்காட்டில் தாக்குதல் | Tamilwin Online - தமிழ்வின் ஒன்லைன் Sri Lankan Tamil News Website | Latest Breaking News Online - Lanka News - Tamilwin News

இதன்போது மோட்டார் சைக்கிள், புத்தகப்பை என்பன தீயிட்டு கொளுத்தப்பட்டதோடு யன்னல் கண்ணாடிகள், கண்காணிப்பு கமராக்களும் அடித்து நொருக்கப்பட்டது.

சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸார் விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.

பெண்கள் வேடமணிந்து நள்ளிரவில் கல்வியன்காட்டில் தாக்குதல் | Tamilwin Online - தமிழ்வின் ஒன்லைன் Sri Lankan Tamil News Website | Latest Breaking News Online - Lanka News - Tamilwin News

வெளிநாட்டில் உள்ள ஒருவரே இங்குள்ள வன்முறை கும்பலுக்கு பணம் அனுப்பி வன்முறையில் ஈடுபட்டுள்ளமை பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

கல்வியங்காட்டில் இவ்வாறான வன்முறை சம்பவங்கள் தொடர்ச்சியாக இடம்பெறுவதாகவும் எனினும் குற்றவாளிகள் கைது செய்யப்படுவதில்லை எனவும் அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

பெண்கள் வேடமணிந்து நள்ளிரவில் கல்வியன்காட்டில் தாக்குதல் | Tamilwin Online - தமிழ்வின் ஒன்லைன் Sri Lankan Tamil News Website | Latest Breaking News Online - Lanka News - Tamilwin News

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here