பெண்ணொருவரின் சடலம் மீட்பு

பெல்லன்வில மஹரகம வீதி பாலத்திற்கு அருகில் உள்ள கால்வாயில் பெண்ணொருவரின் சடலம் இன்று (30) கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொரலஸ்கமுவ பொலிஸார் தெரிவித்தனர்.

பொரலஸ்கமுவ மதிசுத்தகர வெரஹெர வீதி வல்லஹா கொடவத்த முதியன்செல என்ற இடத்தில் வசிக்கும் திருமணமான பெண்ணான மோனிகா நாம (62) என்பவரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கால்வாய் அருகில் அவரது தோள் பை ஒன்றும், தேசிய அடையாள அட்டை திருடப்பட்டதாக முறைப்பாடு செய்த பற்றுச் சீட்டும் பழைய ஆடைகளும் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

நுகேகொட பதில் நீதவான் திஸ்ஸ விஜேரத்ன சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டதுடன், உயிரிழந்தவரை களுபோவில பிரேத அறையில் வைக்குமாறு உத்தரவிட்டதுடன், பிரேத பரிசோதனையை மேற்கொண்டு நீதிமன்றில் அறிக்கை சமர்ப்பிக்குமாறும் உத்தரவிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here