பெண் கிராம உத்தியோகத்தரின் மோசமான செயல்

பெண் கிராம உத்தியோகத்தர் ஒருவர் அழகு சாதனப்பொருள் விற்பனை நிலையம் ஒன்றில் களவெடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தியோகத்தர் களவெடுத்த சம்பவம் அங்கிருந்த சீசீரிவி காணொளியில் பதிவாகியுள்ளது.

விற்பனை நிலையத்திற்கு வருகை தந்த குறித்த பெண் கிராம உத்தியோகத்தர் அங்குமிங்கும் பார்த்த பின்னர் தாம் அணிந்திருந்த ஜேர்சியை ஓரிடத்தில் கழற்றிவைக்கின்றார்.

அதன் பின்னர் ஜேர்சியையும் தனது கைப்பையையும் எடுத்துக்கொண்டு அங்கிருந்த ஏதோ ஒரு பொருளை தனது ஜேர்சிக்குள் மறைத்து வைத்துக்கொள்கின்றார்.

அத்துடன் , அங்கிருந்த ஒரு சோடி காலணியையும் திருடிக்கொண்டு அங்கிருந்து செல்ல முயற்சிக்கின்றார். பெண் கிராம உத்தியோகத்தர் பொருட்களை திருடும் காணொளி விற்பனை நிலையத்தில் பொருத்தப்பட்டிருந்த சீசீரிவி காணொளியில் பதிவாகியுள்ளது.

இந்நிலையில் குறித்த காணொளி சமூகவலைத்தளங்களில் வெளியாகியுள்ள நிலையில், மக்களுக்கு சேவை செய்யும் அரச ஊழியர் இவ்வாறு நடந்துகொண்டுள்ளமை குறித்து விசனம் வெளியிடப்பட்டுள்ளது.

பெண் கிராம உத்தியோகத்தரின் மோசமான செயல் - Lanka News - Tamilwin News பெண் கிராம உத்தியோகத்தரின் மோசமான செயல் - Lanka News - Tamilwin News

மேலும் அறிய  கண் வைத்தியர் தனியார் விடுதியில் சடலமாக மீட்பு!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here