பேருந்துக்குள் மாணவிக்கு அந்தரங்க உறுப்பை காண்பித்தவருக்கு விளக்கமறியல்!

பேருந்தில் பாடசாலைக்கு சென்று கொண்டிருந்த 17 வயது பாடசாலை மாணவியை பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 24 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தையை இம்மாதம் 10ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மஹர இலக்கம் 02 நீதிமன்ற நீதவான் ஜனித பெரேரா உத்தரவிட்டுள்ளார்.

இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளவர் காலி பிரதேசத்தில் வசிக்கும் ஒரு பிள்ளையின் தந்தை ஆவார்.

த்கொடவில் இருந்து கராபுகசந்தியா செல்லும் தனியார் பயணிகள் பேருந்தின் இலக்கம் 356 இல் மாகொல பகுதியில் உள்ள பாடசாலைக்குச் செல்வதற்காக குறித்த சிறுமி ஏறி ஆசனத்தில் அமர்ந்துள்ளார்.

பின்னர், வேறொரு இடத்தில் இருந்து பேருந்தில் ஏறி, மாணவி இருக்கைக்கு அருகில் அமர்ந்திருந்த சந்தேகநபர், காற்சட்டை சிப்பை கழற்றி அந்தரங்க உறுப்பை காட்டியுள்ளார். இதனால் மாணவி பயந்து கூச்சலிட்டபடி, பேருந்திலிருந்து இறங்கி ஓட முயன்றார்.

அப்போது, ​​பேருந்தின் நடத்துனர், பயணிகள் சந்தேகநபரை பிடித்து, சாத்துப்படி கொடுத்து, பொலிசில் ஒப்படைத்தனர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here