பொகவந்தலாவையில் இளைஞன் தற்கொலை முயற்சி!

பொகவந்தலாவை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொகவந்தலாவை செல்வக்கந்தை தோட்டப் பகுதியில் இளைஞன் ஒருவன் கத்தி ஒன்றால் தனது கழுத்தை அறுத்துக் கொண்டு தற்கொலைக்கு முயற்சித்துள்ளார்.

நேற்று (11) மதியம் இந்த சம்பவம் இடம் பெற்றதாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்தனர்.

வீட்டில் தந்தையுடன் இருந்த இளைஞன் தந்தைக்கு தெரியாமல் வீட்டில் இருந்த கத்தியை எடுத்து தனது கழுத்தை அறுத்துக் கொண்டுள்ளார்.

மகனை கண்ட தந்தை கூச்சலிட்டதை அடுத்து பொது மக்களின் உதவியோடு குறித்த இளைஞன் பொகவந்தலாவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

அதிகளவில் இரத்தம் வெளியேறியுள்ளதோடு குறித்த இளைஞன் மேலதிக சிகிக்ச்சைக்காக டிக்கோயா கிழங்கன் ஆதார வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

தனது கழுத்தை தானே அறுத்துக்கொண்டதற்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை எனவும் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட இளைஞனின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

38 வயதுடைய இளைஞன் ஒருவனே இவ்வாறு தற்கொலைக்கு முயன்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் பொகவந்தலாவ பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here