பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முல்லையடி ஊரெல்லைதெரு வீதியில் தொடர்ச்சியாக மக்களை அச்சுறுத்தி வந்த ஆவா காவாலிகளில் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முல்லையடி ஊரெலுத்தெரு வீதியில் நீண்ட காலமாக இரவு வேளைகளில் காவாலிகளால் மக்களுக்கு இடையூறு விளைவிக்கப்பட்டு வருகிறது.
குறித்த வீதியில் இரவு வேளைகளில் சில இளைஞர்கள் மதுபோதை மற்றும் கஞ்சா போதை பொருள் போன்றவற்றை பயன்படுத்திவிட்டு தம்மை ஆவா குழு என அடையாளப்படுத்தி நள்ளிரவு வேளைகளில் நடு வீதியில் பிறந்த நாள் கொண்டாட்டங்கள் கொண்டாடப்பட்டு வருகிறது.
போதையில் அருகில் உள்ளவர்களின் வீடுகளை உடைப்பதும் அவதூறான வார்த்தை பிரயோகங்கள் செய்வதுமாக இருக்கின்றார்கள்.

குறித்த விடயம் தொடர்பாக பொலிசாருக்கு தெரிவித்த போதிலும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் குறித்த இளைஞர்கள் கிராம மக்களின் நெருக்கடியால் பல தடவைகள் பொலிசாரினால் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டனர் மீண்டும் அவர்கள் தமது காவாலி தனத்தை தொடர்ச்சியாக செய்து வந்தனர்.
சமூக வலைத்தளங்களில் தாம் ஆவா குழு எனவும் 001ஆவா எனவும் வாள்,கத்தியுடன் பதிவிட்டுள்ளார்கள்.
இருப்பினும் இதுவரையில் அவர்களுக்கு சரியான சட்ட நடவடிக்கை எடுக்கப்படவில்லை இவ்வாறான சமூக சீர்கேடுகளை சுட்டிக்காட்டி செய்தி வெளியிட்டமையாலும், சட்டநடவடிக்கை மேற்கொண்டதாலும் கிளிநொச்சி மாவட்ட ஊடகவியலாளர் தனது வீட்டில் இருந்த போது மது போதையும் கஞ்சா போதையும் உச்சத்துக்கேறிய காவாலி ஒருவர் ஊடகவியலாளரின் வீட்டு படலையை உடைத்து வளவிற்குள் கத்தியுடன் நுழைந்து அவரது போனை பறித்து அவதூறான வார்த்தை பிரயோகங்களையும் பாவித்து கத்தியை வைத்து வெட்ட முயற்சித்துள்ளார் பின் அவரை தாக்கியும் உள்ளார்.
பின் வீட்டின் கதவு நிலைகளை கத்தியால் கொத்தி உடைத்துள்ளார்.அதன் பின் அந்த வீதியில் உள்ள இனொரு பெண் வீட்டிற்கு சென்று அவரையும் தாக்கி தற்பொழுது கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பாக பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாகவும் குறித்த சந்தேகநபர் தலைமறைவாகியுள்ள நிலையில் தற்போது அவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் போலிசார் மேலும் தெரிவித்துள்ளனர்.