மட்டக்களப்பு பிரபல ஆடையகமொன்றின் அசிங்கம்; வெளியான காணொளி!

மட்டக்களப்பில் இயங்கி வரும் பிரபல ஆடைத்தொழிச்சாலையின் உயர் பதவியில் இருக்கும் சிலரால் அங்கு வேலைக்கு செல்லும் அப்பாவி பெண்களின் வாழ்க்கை கேள்விக்குறியாகி வருகிறது.

இது தொடர்பிலான காணொளியில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தங்களுக்கு இணக்கம் தெரிவிக்காத பெண்களை வேலைய விட்டு நிறுத்துவது அல்லது ஊதியத்தை நிறுத்துவது என பல தொல்லைகளை கொடுப்பதால் பல பெண்கள் வேலையை விட்டு சென்றுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

அதேசமயம் தங்களின் குடும்ப கஸ்ரங்களுக்கும் வாழ்வாதாரத்துக்கும் பிள்ளைகளின் வாழ்க்கைச்செலவுக்கும் என ஒரு சிலர் இந்த செயல்பாடுகளை பொறுத்துகொள்ளவேண்டிய நிலையிலும் உள்ளனர்.

தமது வாழ்க்கையின் வறுமையை போக்கவென வேலைக்கு செல்லும் பெண்களிடம் இவ்வாறு பாலியல் தொல்லை கொடுப்பது வருந்தத்தக்க விடயம் எனவும், இது தொடர்பில் உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here