மட்டு வைத்தியசாலையில் மாணவி மரணம்!! நடந்தது என்ன??

மட்டக்களப்பு கொக்குவில்லை சேர்ந்த சாந்தகுமார் எப்சிபா என்னும் 16 வயதுடைய மாணவி கடந்த புதன்கிழமை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று முன்தினம் உயிரிழந்துள்ளார்.

தனது மகளின் இறப்பிற்கு மட்டு போதனா வைத்தியசாலை நிர்வாகமே முழுக்க முழுக்க காரணம் என மரணித்த பிள்ளையின் பெற்றோர் இன்று வைத்தியசாலையின் முன்பாக நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இது குறித்து மேலும் தெரியவருகையில்,

குறித்த மாணவி தோல் சம்பந்தப்பட்ட  நோய்காரணமாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் கிளினிக் சென்று வந்த நிலையில் காய்ச்சல் காரணமாக கடந்த புதன் கிழமை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மட்டு வைத்தியசாலையில் மாணவி மரணம்!! நடந்தது என்ன?? - Lanka News - Tamilwin News

அதன்பின்னர் சலம் நிறமாற்றத்துடன் வெளியேறியதனை தொடர்ந்து மரணித்துள்ளார்.

இது குறித்து மாணவியின் பெற்றோர் வைத்தியர்களிடம் வினவியபோது, டெங்கு நோயிற்கான அறிகுறி தென்பட்டதனால் அதற்கான மருந்தினை வழங்கினோம்,

பிள்ளைக்கு இரத்தத்தில் கிருமி கலந்து விட்டது, பிள்ளைக்கு குஸ்ரரோகம் என்னும் தோல் வியாதி இருந்துள்ளது இதனால் தான் பிள்ளை மரணித்துள்ளது என பல பதில்களை கூறியுள்ளனர்.

இவர்கள் கூறும் காரணங்களை எம்மால் ஏற்க முடியாது. எனது பிள்ளையின் இறப்பிற்கு நியாயம் வேண்டும் என பெற்றோர், உறவினர்கள், நண்பர்கள் மட்டு போதனா வைத்தியசாலை நிர்வாகதிற்கு எதிராக தங்கள் கண்டங்களை தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here