மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞனால் யாழில் சிறுவன் மீது கத்திக்குத்து

யாழ்ப்பாணத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞன், சிறுவன் மீது கத்திக்குத்து தாக்குதலை மேற்கொண்டுள்ளாா்.

தெல்லிப்பளை பகுதியில் நேற்றைய தினம் வியாழக்கிழமை இடம்பெற்ற குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

யாழ்.புறநகர் பகுதியை சேர்ந்த 21 வயதுடைய இளைஞன் மனநிலை பாதிக்கப்பட்ட நிலையில் , தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெறுவதற்காக வைத்தியசாலைக்கு அருகில் உள்ள உறவினர் வீட்டில் தங்கி இருந்துள்ளார்.

வீட்டில் இருந்த உறவினரான சிறுவன் , உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில் வீட்டில் படுத்திருந்த வேளை சிறுவன் மீது கத்திக்குத்து தாக்குதலை மேற்கொண்டுள்ளார்.

அதனை அவதானித்த சிறுவனின் பெற்றோர் , தமது பிள்ளையை இளைஞனிடம் இருந்து பாதுகாத்து , வைத்தியசாலையில் அனுமதித்ததுடன் , பலாலி காவல்துறையினருக்கும் அறிவித்தனர்.

அதனை அடுத்து பலாலி காவல்துறையினர் கத்தி குத்து தாக்குதல் நடாத்திய இளைஞனை கைது செய்து, காவல் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

மேலும் அறிய  கண் வைத்தியர் தனியார் விடுதியில் சடலமாக மீட்பு!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here