மனைவியின் தங்கையான 11ம் வகுப்பு மாணவியுடன் ரூம் போட்ட அத்தானுக்கு வலை!

மனைவியின் இளைய சகோதரியை விடுதிக்கு அழைத்துச் சென்று வன்புணர்வு செய்த சந்தேக நபரை கைது செய்வதற்கான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ஆனமடுவ பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

நேற்று முந்தினம் (21) பிற்பகல் ஹலவத்த நகரிலுள்ள தங்கும் விடுதி ஒன்றில் இந்தக் குற்றம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பலாத்காரத்திற்கு உள்ளானவர் ஆனமடுவ பிரதேசத்தில் உள்ள 11ம் ஆண்டு பாடசாலை மாணவி என பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

குறித்த மாணவியின் சகோதரி திருமணமாகி ஹலவத்தை பிரதேசத்தில் வசிப்பவர் எனவும், மாணவி தனது அக்காவின் கணவருடன் காதல் உறவில் ஈடுபட்டுள்ளதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here