மன்னார் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்கள் அடையாளம் காணப்பட்டனர்.

மன்னார் அடம்பன் முள்ளிக்கண்டல் பகுதியில் இன்று வியாழக்கிழமை (24) காலை மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் மீது இனம் தெரியாத நபர்கள் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் உயிாிழந்த இருவரும் அடையாளம் காணப்பட்டுள்ளனா்.

உயிரிழந்தவர்கள் மன்னார் நொச்சிக்குளம் பகுதியைச் சேர்ந்த ஜேசுதாசன் அருந்தவராஜா (வயது-43) மற்றும் மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள சன்னார் கிராமத்தை சேர்ந்த கணபதி காளிமுத்து (வயது-56) ஆகிய இரு குடும்பஸ்தர்கள் எனத் தொிவிக்கப்பட்டுள்ளது. -கொலைக்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை.

இதேவேளை கடந்த வருடம் மன்னார் நொச்சிக்குளம் பகுதியில் இடம்பெற்ற இரட்டைக் கொலை தொடர்பாக கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்ட நொச்சி குளத்தைச் சேர்ந்த ஒருவரும் குறித்த துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்துள்ளார்.

பழிக்கு பழிவாங்கும் நோக்குடன் இச்சம்பவம் இடம் பெற்றிருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது. -குறித்த இரட்டை கொலை தொடர்பாக அடம்பன் காவல்துறையினா் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

மன்னார் முள்ளிக்கண்டல் பகுதியில் துப்பாக்கிச் சூடு; இருவர் உயிரிழப்பு

மேலும் அறிய  கண் வைத்தியர் தனியார் விடுதியில் சடலமாக மீட்பு!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here