HomeAccident Newsமரக்கறி ஏற்றச்சென்ற லொறி விபத்து : 14 பேர் படுகாயம்

மரக்கறி ஏற்றச்சென்ற லொறி விபத்து : 14 பேர் படுகாயம்

நுவரெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட லபுக்கலை பகுதிக்கு மரக்கறி ஏற்றச் சென்ற லொறி கொண்டக்கலை பகுதியில் பாரிய பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்கு உள்ளாகியுள்ளது.

இன்று ( 5) காலை இடம்பெற்ற இந்த விபத்தில் 14 பேர் பலத்த காயங்களுக்கு உள்ளான நிலையில் இவர்கள் நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் ஐவர் வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக வைத்தியசாலை பணிப்பாளர் தெரிவித்தார் .

நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தில் இருந்து லபுக்கலை பகுதிக்கு மரக்கறி வகைகளை அறுவடை செய்து ஏற்றச்சென்ற லொறி வீதியில் பயணித்துக் கொண்டிருந்த போது சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி சுமார் 70 அடி பள்ளத்தில் வீழ்ந்ததாகவும் இதனைத் தொடர்ந்து லொறியில் பின் பகுதியில் அமர்ந்து பயணித்தோர் அதிலிருந்து தூக்கி வீசப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

விபத்து குறித்து மேலதிக விசாரணைகளை நுவரெலியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

மரக்கறி ஏற்றச்சென்ற லொறி விபத்து : 14 பேர் படுகாயம் - Lanka News - Tamilwin News மரக்கறி ஏற்றச்சென்ற லொறி விபத்து : 14 பேர் படுகாயம் - Lanka News - Tamilwin News

மேலும் அறிய  கண் வைத்தியர் தனியார் விடுதியில் சடலமாக மீட்பு!
RELATED ARTICLES

Most Popular

Recent Comments