மரக்கிளை முறிந்து விழுந்ததில் 17 வயது மாணவி பலி – பூண்டுலோயாவில் சம்பவம்

பூண்டுலோயா பகுதியில் இருந்து அக்கரப்பத்தனை பிரதேசத்திற்கு தந்தையின் மோட்டார் சைக்கிளில் பின்னால் அமர்ந்து சென்ற போது வீதியின் அருகிலிருந்த வாகை மரத்தின் கிளை ஒன்று முறிந்து விழுந்ததால் 17 வயதுடைய சிறுமி பலியாகியுள்ளார்.

இச்சம்பவம் நேற்று மாலை 6.30 மணியளவில் பூண்டுலோயா நியாகந்தை பாலுவத்த பகுதியில் நிகழ்ந்துள்ளது.

மரக்கிளை முறிந்து விழுந்ததில் 17 வயது மாணவி பலி - பூண்டுலோயாவில் சம்பவம் - Lanka News - Tamilwin News

இவ்வாறு இறந்தவர் அக்கரப்பத்தனை உருவள்ளி பகுதியை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இவ் அனர்த்தத்தில் துரதிஸ்ட வசமாக தன் உயிரை இழந்த விஜயராஜ் திவியராணி என்ற மாணவியின் சடலம் கொத்மலை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

மேலும் அறிய  கூகுள் அளித்த இன்ப அதிர்ச்சி..!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here